×

சென்னையில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்ற 44 -வது செஸ் ஒலிம்பியாட் சிறப்பு ஓட்டம்

சென்னை: 44 – வது செஸ் ஒலிம்பியாட் சிறப்பு ஓட்டம் இன்று (24-07-2022) காலை 7 மணிக்கு சென்னை நேப்பியர் பாலத்திலிருந்து தொடங்கி கலங்கரை விளக்கம் வரை நடைபெற்றது. தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், செய்தி மக்கள் தொடர்புத்துறை இணைந்து நடத்திய இந்த சிறப்பு ஓட்டத்தில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய விடுதி மாணவ-மாணவியர்கள், சதுரங்க விளையாட்டு வீரர்கள், சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்ட மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் திரு. மா. சுப்பிரமணியம் அவர்கள், மாண்புமிகு இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் திரு. பி. கே. சேகர் பாபு அவர்கள் மற்றும் மாண்புமிகு சுற்றுச்சூழல், காலநிலை மாற்றுத்துறை மற்றும் இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் திரு. சிவ வீ. மெய்யனாதன் அவர்கள் ஆகியோர் கொடி அசைத்து துவக்கி வைத்தனர். இந்நிகழ்ச்சியில் மாண்புமிகு சென்னை மேயர் திருமதி. ஆர். பிரியா அவர்கள், துணை மேயர் திரு. மு. மகேஷ் குமார் அவர்கள், மயிலாப்பூர் சட்டமன்ற உறுப்பினர் திரு. த. வேலு அவர்கள், செய்தி மக்கள் தொடர்புத்துறை இயக்குநர் முனைவர். வீ. ப. ஜெயசீலன் இ. ஆ. ப. அவர்கள் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சிக்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை காவல்துறை மற்றும் போக்குவரத்து துறையினர் இணைந்து மேற்கொண்டனர். இப்பேரணியில் கலந்து கொண்ட மாணவ-மாணவியர்கள், சதுரங்க விளையாட்டு வீரர்களுக்கு திருப்பூர் கிளசிக் போலோ பின்னலாடை நிறுவனம் சார்பில் டி-ஷர்ட்டுகள் (T-Shirt)  வழங்கப்பட்டது. முன்னதாக மயிலாப்பூர் சட்டமன்ற உறுப்பினர் அவர்கள் தலைமையில் 44 – வது செஸ் ஒலிம்பியாட் விழிப்புணர்வு சைக்கிள் பேரணி கலங்கரை விளக்கம் முதல் நேப்பியர் பாலம் வரை நடைபெற்றது. …

The post சென்னையில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்ற 44 -வது செஸ் ஒலிம்பியாட் சிறப்பு ஓட்டம் appeared first on Dinakaran.

Tags : 44th Chess Olympiad Special Flow ,Chennai ,Chess Olympiad special ,Chennai Napier ,
× RELATED சென்னை சேப்பாக்கத்தில்...